Skip to content
Home » வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3 அடி உயர திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷப தேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். பிறகு ராஜேஷ் கண்ணன் தனது நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்(39),  என்பவரிடம் தெரிவித்துள்ளார். பிறகு, ராஜேஷ் கண்ணன் திருமுருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தார். பிறகு ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரும் ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர்.

இதற்கிடையில், சமீபத்தில் ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளி நாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டனர். வெளிநாட்டிற்கு கொண்டு  சென்றால் இந்த சிலைகளின் விலை ரூ.20 கோடிக்கு மேல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரையும் கைது செய்த போலீஸார் ஆறு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து  பறி்முதல் செய்யப்பட்ட  சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!