கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான தகவல் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டதாக வி.ஜி.எம்.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் தெரிவித்தார்..
கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக லிவர் இன் போகஸ் (Liver In Focus) எனும் கல்லீரல் நோய் சிகிச்சை குறித்த கருத்தரங்கம் அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.வி.ஜி.எம்.மருத்துவமனையின் தலைவர் வி.ஜி.மோகன் பிரசாத் தலைமையில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில்,மருத்துவர்கள் வி.ஜி.மோகன் பிரசாத்,வம்சி மூர்த்தி,மித்ரா பிரசாத்,மதுரா,சுமன்,கோகுல் கிருபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் கல்லீரல் நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து பல்வேறு தலைப்பில் உரைகள்,கருத்தரங்குகள் நடைபெற்றது. குறிப்பாக லிவர் இன் போகஸ் எனும் இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது,இந்த தளத்தில் கல்லீரல் நோய் தொடர்பான சிகிச்சைகள்,ஆய்வுகள்,
சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள் குறித்த தகவல்கள் என அனைத்தும் இதில் இடம் பெற்றிருக்கும் என தெரிவித்தனர்.
இந்த வெப் சைட்டை டில்லியில் ஐ.எல்.பி.எஸ்.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சிவகுமார் ஷரின் துவக்கி வைத்துள்ளார்.அதே போல இந்தியாவிலேயே முதன் முறையாக கல்லீரல் நோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் நிலையான ஆரம்ப கட்ட சிகிச்சைகளுக்கு தேவையான தகவல்கள் அடங்கிய ஜி.ஐ.தெரபுயூடிக்ஸ் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்,நவீன முறை சிகிச்சைகள் வரை அடங்கியுள்ள இந்த புத்தகம் மருத்துவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த புத்தகத்தை கலிங்கா பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஆசார்யா வெளியிட்டார்.3 நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் நவீன முறை சிகிச்சைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு,கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள சவால்கள்,உலக அளவில் உருவான புதிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டுடனர்.