பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், மாற்றப்பட்டார். அவர் காவலர் பயிற்சிப்பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டார். அவருக்குப்பதில் கூடுதல் ஆணையர் அருண், சென்னைந மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.