மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர். பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார்
அப்போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஸ் திடீரென தானாக நகர்ந்தது, இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், பஸ் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலிருந்து 100 அடி தொலைவிற்கு நகர்ந்தது, பஸ்சை டிரைவர் எடுத்து செல்வதாக நினைத்து நடத்துனர் விசில் அடித்துக் கொண்டே பஸ் பின்னால் ஓடினார்,அந்த நேரத்தில் குறுக்கு சாலையில் யாரும் செல்லாததால் எதிரே இருந்த சுவரில் பஸ் மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது,