பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். இந்தப் பூ ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மலரும் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும். ஒரே ஒருநாள் மட்டும் தான் பூ மலர்ந்து இருக்கும் இந்தப் பூவின் நறுமனம் பூச்செடி உள்ள பகுதி முழுவதும் வீசும் தன்மை உடையது.
இந்தநிலையில் கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள பழனிச்சாமி – சரஸ்வதி தம்பதியினர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு செடியில் ஒரே ஒரு நிஷா காந்தி (எ) பிரம்ம கமலம் பூ மலர்ந்தது. அதனை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த குடும்பத்தினர். தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள குடும்பங்களுக்கும் தகவல் கொடுத்தனர்
இது குறித்து அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.