திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தனது காரில் புறப்பட்டனர். அந்த காரை போசங்கு மகன் இளம்பரிதி ஓட்டி வந்தார். அப்போது அந்த கார் இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு சாலை வந்தபோது முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது வேகமாக மோதியது இதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக இளம்பரிதி மனைவி யோகப்பிரியா இறந்தார். மேலும் காரில் பயணித்த இளம்பரிதி அவரது மகன்கள் இனியன் (6), இமையன் (3) மற்றும் அவரது உறவினர் திண்டுக்கல் மாவட்டம் புதூரை சேர்ந்த வீரபாண்டி மகன் தங்கபாண்டி (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த 4 பேர் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.