அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி (புதன்) முதல் 19.7.2024 வரை கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி,
10.7.2024 (புதன்) பிற்பகல் 3.30 மணி – காஞ்சிபுரம் தொகுதி, மாலை 5.30 – ஸ்ரீபெரும்புதூர் தொகுதி.
11.7.2024 (வியாழன்) காலை 9 மணி – சிவகங்கை, காலை 11 மணி – வேலூர், பிற்பகல் 3.30 – திருவண்ணாமலை
12.7.2024 (வெள்ளி) காலை 9 மணி – அரக்கோணம், காலை 11 மணி – தஞ்சாவூர், பிற்பகல் 3.30 மணி – திருச்சி
13.7.2024 (சனி) காலை 9 மணி – சிதம்பரம், காலை 11 மணி- மதுரை, பிற்பகல் 3.30 மணி – பெரம்பலூர்
15.7.2024 (திங்கள்) காலை 9 மணி – நாகப்பட்டினம், காலை 11 மணி – மயிலாடுதுறை பிற்பகல் 3.30 மணி – கிருஷ்ணகிரி
16.7.2024 (செவ்வாய்) காலை 9 மணி – ராமநாதபுரம், காலை 11 மணி – திருநெல்வேலி, பிற்பகல் 3.30 மணி – விருதுநகர்
17.7.2024 (புதன்) காலை 9 மணி – தென்காசி, காலை 11 மணி – தேனி, பிற்பகல் 3.30 மணி திண்டுக்கல்
18.7.2024 (வியாழன்) காலை 9 மணி – பொள்ளாச்சி, காலை 11 மணி – நீலகிரி பிற்பகல் 3.30 மணி – கோயம்புத்தூர்
19.7.2024 (வெள்ளி) காலை 9 மணி – விழுப்புரம், காலை 11 மணி – கன்னியாகுமரி, பிற்பகல் 3.30 மணி தர்மபுரி.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், கட்சி செய்தி தொடர்பாளர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர்கள், மண்டல குழுத் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள், வரும் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து உடனடியாக 2ம் கட்ட தலைவர்களை அழைத்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிக்கவில்லை என புகார்கள் எழுந்தன. இத்தகைய சூழ்நிலையில் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக வெளியான அறிவிப்பு நிர்வாகிகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் சசிகலா மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கான தேதிகள் எதையும் சசிகலா அறிவிக்கவில்லை. இதன் காரணமாகவே தாமதம் என்றாலும் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்போவதாக கூறி நிர்வாகிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு அழைத்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்..