Skip to content
Home » புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!