கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள பேரூர் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், கவுண்டன் புதூர் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 3 பேர் வீடுகளில் சோதனை நடந்தது.
திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனை 10 மணி அளவில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் நடத்திய சோதனையில் 3 இடங்களிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.