Skip to content
Home » கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடியிலும், கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.10,740 கோடியிலும் விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்த உடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மற்றும் கோயம்புத்தூர் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி விருப்பம் தெரிவித்ததுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து மதுரையில் நேற்று, முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோயம்புத்தூரிலும் ஆய்பு மேற்கொண்டது. உக்கடம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.4 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!