Skip to content
Home » பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45 மணிக்கு ரூ. 6 லட்சத்துடன்  வந்தார். பேங்கினுள் சென்று நகையை மீட்க கேட்டபோது இன்று நேரம் முடிந்து விட்டது நாளை வாருங்கள் என்று கூறி வங்கி அதிகாரிகள்  அனுப்பிவிட்டனர்.

பையில் ரூ.6 லட்சம்  மற்றும் செல்போனை வைத்துக்கொண்டு  சுரேஷ் வெளியே  வந்தார், அவரது பைக் டேங்க் கவரில் வைக்க சென்றபோது , அங்கு வேகமாக வந்த இரு மர்ம நபர்கள் சுரேஷை எட்டி உதைத்து விட்டு கையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் உடன் கூடிய பையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

திருடன், திருடன் என  சுரேஷ் கூச்சல் போட்டார். ஆனாலும் யாரும் உதவிக்கு வரவில்லை. அதற்குள் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.   இது குறித்து சுரேஷ்  பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள   சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து  கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் பற்றிய சில தடயங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பேரில் 2 பேரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!