கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளில், தி.மு.க., தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என்பதோடு, அவர் மீது வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரிடம் இருந்தும் கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை மேயராக கல்பனா பொறுப்பேற்றதில் இருந்து, மாநகராட்சி கமிஷனர்களாக இருந்த ராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்தார். அதேபோல, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதினார். அவர் மீது கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில், சமீபத்திய லோக்சபா தேர்தலில் மேயர் கல்பனாவின் 19வது வார்டில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிக ஓட்டுகளைப் பெற்றிருந்தது, கட்சித் தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை மேயர் கல்பனா இன்று கமிஷனரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.