Skip to content
Home » புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை எட்டு மணிக்கு தொடங்கி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு  நிறைவடைகிறது. போராட்டத்தில் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்  கலந்து கொண்டனர்.புதிய நடை முறை சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று  வழக்கறிஞர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!