அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கக்கூடியதும், எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
இதன் கீழ் இன்று முதல், அரியலூர் வட்டார வள மையத்தில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து, கலந்தாய்வை உடனே ரத்து செய்து அரசாணை எண் 243ஐ வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஆசிரியர்களின் நலனையும் மாணவர்களின் கல்வித் திறனையும் கருத்தில் கொண்டு அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து கலந்தாய்வு நடைபெறும் வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.