புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் ஆலயம் திகழ்கிறது
பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட இந்த வரத வீர ஆஞ்சநேயர் ஆலயத்தை 15 வருடத்திற்கு பிறகு தமிழக முதல்வர் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலைத்துறைக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் யாகசாலை பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க இன்று துவங்கப்பட்டது.
புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா மற்றும் செயல் அலுவலர் முத்துராமன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி செயல் அலுவலர் கவிதா இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் திவ்யபாரதி, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் ,ஆலய மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் வரத வீர ஆஞ்சநேய ஆலய தலைமை ஆச்சார் குருராஜன் சுதாகர் கலந்து கொண்டனர்
டாக்டர் எஸ்.ராமதாஸ், டாக்டர் ராமமூர்த்தி ,ஸ்தபதி R. குமரிஆனந்தன் ,திவ்யா ஜிவல்லரி லட்சுமணன் ,சிற்பி கண்ணன் ,ஹனுமன் திருச்சபை ஆன்மீக நெறியாளர்கள் A.ஆனந்தன் ,அழகேசன் ,வீரலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பணி வேலைகளை துவக்கி வைத்தனர்