Skip to content
Home » கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

கள்ளக்குறிச்சியில் கடந்த  மாதம்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்கள் குடித்த விஷ சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதை  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரசாயன பரிசோதனைக்கூடத்தில் நடந்த சோதனையில்  கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட  விஷ சாராயத்தில் 10 சதவீதம்  மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்து உள்ளது.

மெத்தனால் என்பது  பெயிண்ட் தயாரிக்கும் ரசாயனம். இதனை போதைக்காக  தண்ணீரில் கலந்து  சாராயம் என விற்பனை செய்து உள்ளனர். 4.5 % மெத்தனால் கலக்கப்பட்ட திரவத்தை குடித்தாலே  உயிர் போய்விடும். ஆனால் கள்ளக்குறிச்சியில்  அதிகபட்சமாக 29.7% வரை  மெத்தனால் கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் சாராயம் தயாரிக்கப்படவே இல்லை.  குடிக்கிற தண்ணீரில் மெத்தனாலை கலந்து  சாராயம் என விற்பனை செய்து உள்ளனர். இதனால் தான் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.  இந்த தகவலை  தமிழக அரசும் உறுதி செய்துள்ளது. ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்  8.6% முதல்  29.7% வரை மெத்தனால் கலந்து விற்பனை செய்துள்ளனர் என்றும்  அதில் கூறி உள்ளனர்.  மொத்த அரசு எந்திரமும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.  அதிமுக எம்.எல்.ஏ. இது தொடர்பாக எந்த புகாரும் செய்யவில்லை.  அதிமுக சட்டமன்றத்தில் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் எந்த தகவலும் இல்லை.  எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என அதில்  தமிழக அரசு கூறி உள்ளது.

 

கடந்த ஆண்டு மரக்காணத்தில்  சாராயத்தில் 16 % மெத்தனால் கலந்திருந்தது  என்பது அப்போது விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!