குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார். பிரதமர் உரை முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில், பிரதமர் மோடி தனக்கு அருகே நின்று கோஷமிட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு ஒரு கிளாஸில் தண்ணீர் வழங்கினார். அதனை எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் பிரதமரிடமிருந்து வாங்கி பருகிவிட்டு மீண்டும் தனது கோஷத்தை தொடர்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..
- by Authour
