Skip to content
Home » இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்…

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்..

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போங்கள். மேலதிகாரிகளிடம் நெருக்கம் உண்டாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்…

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்…

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்…

கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி…

சந்திராஷ்டமம் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்…

விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்து பேசுவார். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்…

உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

தனுசு…

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்…

கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்…

குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்…

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!