தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடைகாலத்தின் போது அதிக வறட்சி காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து தரைமட்டத்தை எட்டியது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.