இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி் நடந்தது. இதில் சுமார் 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ம் தேதி இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வினாத்தாள் விற்பனை நடந்திருப்பதும் தெரியவ்நதது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்ணும் போடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.
இந்த நி்லையில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டது. இதற்கான தேர்வு கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கருாண மதிப்பெண் பெற்ற 750 பேர் தேர்வு எழுதவில்லை. மீதமுள்ள813 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
நீட் மறுதேர்வு முடிகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிடப்பட்டது. மேலும், மறுதேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக தரவரிசை பட்டியலையும்மதிப்பெண் மாற்றி வெளியிடுள்ளது. நீட் மறுதேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு தேர்வு எழுதியவர்களில் 5 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றவர்கள். இவர்களில் 5 பேரும் தற்போது 680 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர். இதனால் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.