தஞ்சை அருகே மருங்குளத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 2 சிறுவர்கள் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தஞ்சை சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள், நாஞ்சிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மருங்குளத்தில் உள்ள ஒரு வயலில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த அந்த ரெண்டு சிறுவர்களுக்கும் 10 மற்றும் 13 வயது என தெரிய வந்தது. இந்த சிறுவர்களின் பெற்றோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் தலா ரூ.30 ஆயிரம் வாங்கி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து லட்சுமணன் 2 சிறுவர்களையும் தஞ்சை மாவட்டத்தில் வாத்து மேய்க்கும் பணிக்கு அனுப்பியுள்ளார் என்பது அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொடுத்து கொத்தடிமைகளாக சிறுவர்களை வாத்து மேய்க்க விட்ட லட்சுமணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த ஆந்திர சிறுவர்கள் மீட்பு ..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/ஆடு-மேய்த்தல்.jpg)