Skip to content

கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்

கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம்  குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அப்போத அவர் கூறியதாவது:

கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கும், விற்பவர்களுக்கும் ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்  செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது

கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்

மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!