மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை போல் இந்த தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. தோல்வியை கண்டறிந்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான வேலைகளை அமித்ஷா, நட்டா ஆகியோர் இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர்தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழிசைக்கு தேசிய அளவில் பொறுப்பு அளிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில் அமித்ஷாவுடனான தமிழிசையின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் தேர்வு பெற்ற 12 பேருக்கு அரசியல் குறித்த 6 மாதகால படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெலோஷிப் திட்டத்திலான இந்த படிப்பிற்கு அனுமதி பெற்ற 12 பேரில் தமிழகபாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக அவர் 6மாதகாலம் லண்டன் செல்கிறார். இதற்கான விசா பணிகள் முடிவடைந்த நிலையில், அவர்விரைவில் லண்டன் செல்கிறார். அவரது வெளிநாடு பயணத்தின்போது கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார் எனவும், லண்டனில் இருந்தபடியே கட்சியின் பணிகளையும் அண்ணாமலை கவனித்துக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலை 6 மாதம் லண்டன் செல்லும்நிலையில் அமித்ஷா-தமிழிசை சந்திப்பு
- by Authour
