தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் அது தொடர்பாக பெரு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறினார். அடுத்த மாதம் 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறகிறது. முடிவுகள் 13ம் தேதி வெளியாகிறது. எனவே ஜூலை 20 வாக்கில் தமிழக முதல்வர் அமெரிக்க பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/முதல்வர்-930x620.jpg)