புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு ஆண்டிற்கு விவசாயிகளுக்கான அரசு மானியத்திட்ட கையேட்டினை கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா வெளியிட்டார். ‘பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மலை காய், கனிகள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி(பொ) ஆர். ரம்யா தேவி, வேளாண்மை இணை இயக்குனர்(பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.