தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால், இந்த பள்ளியில் பயிலும் 4,5,7 ஆகிய வகுப்புகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கல்வி வெயில் காலங்களில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பெற்றோர் வேதனைப்படுகின்றனர். மழை வந்தால் பாடம் நடத்த முடியாத நிலை. மாணவர்கள் அனைவரும் வகுப்பு வேறுபாடின்றி சமத்துவமாக ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
இந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே வெட்டுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் பள்ளி கட்டிடமும், இந்த காலி பணியிடங்களுக்கு போதுமான ஆசிரியர்களை நியமித்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.