பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யா மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இவர் மீது பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை மடக்கினர். அந்த கும்பல் போலீசாரை தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தது. போலீசார் பின்தொடர்ந்து சென்று ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்த ஒருவர் கீழே சாய்ந்தார். விசாரணையில் அவர் சீர்காழி் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது. சீர்காழி சத்யாவிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையில் இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முயன்றனர். அப்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் சத்யா.