நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர். கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி், திமுக குழு தலைவர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எழந்து நின்று முழக்கமிட்டனர். இதனால் சபாநாயகர் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
அதுபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்கமறுத்தார். இதனால் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களைவயும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.