Skip to content
Home » ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்…. முதல்வர் தகவல்

  • by Senthil

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 7-வது நாள் அமர்வு தொடங்கியது. வினா, விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110  விதியின் கீழ்  கீழ் அறிவிப்புகளை வெளியிட்டாார். அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது தொழில் நிறுவனங்கள் வருவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மோட்டார் வாகனங்கள், மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

ஒசூருக்கு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. ஒசூர் பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும்  பணிகள்  விரைவில் தொடங்கப்படும்.

மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் உலகத்தரம் வாய்ந்த  நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் ஏன் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேைரவையில் சிறப்பு திட்ட   கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ள தகவலில்,    மேல்  முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பெண்களுக்கு  மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். இதற்கான அவர்களது  விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!