பா.ம.க., தலைவர் அன்புமணி அளித்த பேட்டி.. வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று, அவரோடு விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். தேதி, இடம், நேரம் ஆகியவற்றை, அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்யட்டும். திண்டிவனத்தில் இருந்து ராமதாஸ் குரல் ஒலிப்பதாக,அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார். அந்த குரல் மட்டும்ஒலிக்கவில்லை என்றால், அவர் அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுப்பதால், மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்போது கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால், வன்னியர் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால், பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீடு 22 சதவீதமாக அதிகரிக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்திருக்கின்றனர். இது புரியாமல் முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். எந்த கணக்கெடுப்பும் நடத்தாமல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத வழங்க முடியும் என்றால், வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை மீண்டும் சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுகிறது என்பது, அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு எம்.எல்.ஏ.,வின் தம்பி தான், இதை முழுதுமாக கவனித்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சுபவர்களும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும், எங்கள் மீது வழக்கு தொடுக்கின்றனர். இது வேடிக்கையாக உள்ளது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தான் கள்ளச்சாராயம்.. அன்புமணி மீண்டும் பேட்டி..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/அன்புமணி-பேட்டி-930x620.jpg)