சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:2008ம் ஆண்டு சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள முடியாது. சர்வே என்ற பெயரில் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதனை கோர்ட் ரத்து செய்கிறது. எனவெ மத்தி்ய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என இப்பேரவை கருதுகிறது. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சியடையவேண்டும் என அரசு கருதுகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் அனைவரும் முன்னேற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு தன் கடமையை புறக்கணித்து வருகி்றது. உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த தீர்மானத்தி்ன் மீது தவாக தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசும்போது சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் .வெளிமாநிலத்தவர் எங்கள் வேலைவாய்ப்புகளை பறித்துக்கொள்கிறார்கள். எண்ணிக்கைக்கு ஏற்ப சாதிவாரி உரிமைகளை வழங்க வேண்டும். என்றார். அதைத்தொடர்ந்து கொமதேச தலைவர் ஈஸ்வரன், மமக தலைவர்ஜவாஹிருல்லா , மதிமுக சார்பில் கு. சின்னப்பா மற்றும் அனைத்துக்கட்சித்தலைவர்கள் பேசினர். அவர்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள். அனைத்து உறுப்பினர்களும் பேசியபிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.