நடிகர் அர்ஜூன் மக்கள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பி ராமையாவின் குலதெயவ கோவிலில் வழிபட மணமக்கள் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமணம் அருகே உள்ள ராராபுரம் வந்தனர். அங்குள்ள குலதெய்வ கோவிலில் மணமக்கள் வழிபட்டனர். அவர்களுடன் உறவினர்கள் மட்டும் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள பள்ளிக்கு சென்ற மணமக்கள் தங்கள் திருமண விழா பரிசாக பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள் வழங்கினர். மணமக்களை கிராம மக்கள், பள்ளி குழந்தைகள், ஆசிரியைகள் வாழ்த்தினர்.