நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் என்பவரும் போட்டியிடுவதால், முதன்முறையாக தேர்தல் இன்று நடக்கிறது. இத் தேர்தலில் பா.ஜ.விற்கு ஆதரவு அளிப்பதாக ஆந்திராவின் ஓய்.எஸ். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இக்கட்சிக்கு லோக்சபாவில் 4 எம்.பி.,க்கள்உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.