லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கடும் முயற்சி மேற்கொண்டுவருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய (ஜூன் 24) முதல்நாள் கூட்ட அமர்வில், அனைத்து எம்.பி.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 17வது லோக்சபாவின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.