தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர். இன்றைய தினமும் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த அதிமுகவினர் அவை துவங்கியதுடன் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுகவினரை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அனைவரும் வெளியேற்றப்பட்டவுடன் அதிமுகவினரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
சட்டசபையில் தொடர் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/அதிமுக-1-930x620.jpg)