நாகப்பட்டினம் அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த அரவிந்தன் மனைவி அபிராமி (28). இவர் தனியார் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரிக்கு டூ வீலரில் அதே தெருவைச் சேர்ந்த மாணவி ஜனனியை ஏற்றிக்கொண்டு வடகுடி சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், டூ வீலர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த அபிராமி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்தில் இறந்தார். மாணவி ஜனனி வலது காலில் பலத்தகாயத்துடன் உயிர்ததப்பினார். அவருக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/நாகை-பேராசிரியை-1.jpg)