Skip to content
Home » ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

ரூ.56 கோடியில் பள்ளி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்….. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு

சட்டமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு உயரநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வரும்  தொழில் நுட்ப ஆய்வகங்கள்   படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.  நடப்பு கல்வியாண்டில்  முதல்கட்டமாக  1000 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு பள்ளிகள் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

பாரத சாரண, சாரணிய இயக்கத்தின்  வைர விழா  தற்போது நடக்கிறது. இதையொட்டி தேசிய அளவிலான  முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைரவிழா ஜாம்போரி  ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்ப்படும்.

மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆறுமைத் திறன் மேபட மாதிரி சட்டமன்றம் மற்றும் மாதிரி பாராளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.  இந்த தி்ட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ரூ.42 கோடி செல்வில் உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

9ம் வகுப்பு  முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக்கொள்ளவும் படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பளிகளில்  எந்திரனியல் ஆய்வகம்(சடிெடிவைஉள டயெ) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உயர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக அவர்களின் பல்வகைப்புலன்கள் தூண்டப்பட்டு விளையாட்டு வாயிலாக கற்றல்  அனுபவங்களை பெறத்தக்க வகையில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகைத்திறன் பூங்கா என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடியில் உருவாக்கப்படும்.

9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு  அவர்களுக்கு உடல் தீதியாகவும், மனரீதியாகவும் சமூக  ரீதியாகவும், ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், இணையதள  பயன்பாடுகளைப் பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளைக்கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு அகல் விளக்கு என்னும் திட்டம் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

கலைத்திருவிழா  இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்றும் வகையில் நடத்தப்படும்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படி்து நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த  உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அயல்நாட்டு உயர்கல்வி உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்று சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவர்கள்  அந்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக செல்லும் முதல் பயணத்தொகை முழுவதையும் அரைசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.

தருச்சி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டகங்களில் செயல்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்  ரூ.41.63 கோடி செல்வில் தகைசால் நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சி்றார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பீட்டில்  நிறுவப்படும்.

வீடுகள் தோறும் நூலகங்கள் அமைத்து சிற்பாக  பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக்கண்டறிந்து ஊக்குவிக்க ரூ. ரூ.1.14 லட்சம் மதிப்பில் சொந்த நூலகங்களுக்க விருது வழங்கப்படும்.

தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நுூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச  அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விவியல் பணிகள் கழகப் புத்தகங்களை  விற்பனை செ்யதிட ஏதுவாக  விற்பனைக்கான இணைய தளம் ரூ.20 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!