பொள்ளாச்சி நகர்ப்புற பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான டாஸ்மார்க் கடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பார் அதிக அளவில் உள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் அமைதி நகர் வைகை நகர் மற்றும் பத்திரகாளி அம்மன் வீதி, நேரு வீதி, சுளேஸ்வரன்பட்டி பகுதிகளில் தினசரி வேலைக்கு செல்லும் அதிகம் பேர் உள்ளனர்.
வால்பாறை சாலையில் உள்ள பாரில் மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மது குடிக்க வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் மது அருந்திவிட்டு சப்ளை செய்த நபரிடம் ரூபாய் 200 கள்ள நோட்டு கொடுத்துவிட்டு சென்று விட்டனர் .இதை அறியாமல் வாங்கிய சப்பளை செய்த நபர் அங்கு தினசரி குடிக்கும் நபரிடம் காண்பித்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி ஆதங்கப்பட்டார். மது குடிக்க வந்த நபர்கள் தனியார் பார் மேலாளரிடம் இதை எடுத்து கூறி இதை தந்து விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மது பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.