அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இடையே கிரிக்கெட் போட்டி, அரசு மாதிரி மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியை ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி லதா தொடங்கி வைத்ததார் .போட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார், வக்கீல்கள் என இரண்டு அணியாக பிரிந்து கிரிக்கெட் விளையாடினர். இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில், போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் விற்பனையை தடுத்த ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்றது. போட்டியை ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.