Skip to content
Home » கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார். நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் பைபாஸ் ரோட்டில் மண்மங்கலம் நான்கு ரோடு அருகே வந்தபோது, மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மண் திட்டு மீது பஸ் மோதி நின்றது. சிறு காயங்களுடன் பயணிகள் மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு மற்றொரு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் பழுதான பேருந்தில் ஆயில் மாற்றுவதற்காக நாமக்கல், பாண்டமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் மோகனூரை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் பேருந்து உள்ளே ராஜா இருந்துள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த டாரஸ் லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்து மண் திட்டு மீது ஏறி நின்றதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயரிழந்தார். பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஓட்டுநர் ராஜா பேருந்தின் உள்ளே இருந்ததால் உயிர்தப்பினார்.

மேலும் டாரஸ் லாரியை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்டம், சீயோன் மலையை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயபாண்டி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!