கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவியை பறித்துள்ளார். நேற்று தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிப்பு.. திருவாரூர் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலர் பதவியில் இருந்து செந்திலரசன் ஆகிய மூவரும் உடனே கட்சி பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், பா.ஜ, விவசாய அணியின் திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் மதுசூதனனோடு பாஸ்கருக்கு இருந்த முன் விரோதத்தில், மதுசூதனனை சிலருடன் சேர்ந்து பாஸ்கர் வெட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் அகோரம். இது கட்சிக்கு அவப்பெயர் என்பதால், மூவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.