கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (65). இவருடைய மகன் தேவராஜ் இவருக்கு 15 வயதில் திருமுருகன் மகன் உள்ளார். திருமுருகன் பஞ்சப்பட்டி அருகே உள்ள பி. உடையாபட்டி உயர்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இன்று காலை ஃபேன் போடுவதற்காக ஸ்விட்ச் போடும் மின்சாரம் தாக்கியதில் திருமுருகன் துடிதுடித்தார். பேரன் துடிதுடித்ததைப் பார்த்த தாத்தா சீனிவாசன் பேரன் திருமுருகனை காப்பாற்ற சென்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அவர்களது உடல்களை குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.