தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் காரணமாக 54பேர் உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வரும் போலீசார் இன்று பொள்ளாச்சி அடுத்த சி.கோபாலபுரம் பகுதியில் பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்க துறை ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பிக்கப் வாகனத்தை சோதனை செய்த போது அதில் 454 லிட்டர் அடங்கிய 822 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் செந்தில்குமார், விக்நேஷ்பிரபு, ஆனந்தகுமார் ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
822 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… மதுவிலக்கு போலீசார் அதிரடி….
- by Authour
