திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் தினமும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இந்த கடத்தலுக்கு வருவாய்த்துறை மற்றும் போலீசார் உடந்தையாக இருப்பதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார்கள் வந்தன.
இது குறித்து திருச்சி எஸ்.பி., வருண்குமார் நேரடியாக விசாரணை நடத்தினார். போலீசாரின் செல்போன் கால் லிஸ்ட் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் மணல் கடத்தல்காரர்களிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த 23 போலீசாரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்..