கொரோனா தொற்று பரவியது. இதனால் இந்த நடைமுறையில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்டன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்த தளர்வை சாதகமாக்கிக் கொண்டனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என ரகசிய தகவல்கள் மத்திய அரசுக்கு சென்றன. குறிப்பாக ஊழியர்களின் காலைநேர வருகை என்பது மிகவும் தாமதமாக உள்ளதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு அலுலகங்களுக்கு புதிய சுற்றறிக்கை அனுபப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் (வழக்கமான அலுவல் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என உத்தரவு போடப்பட்டு உள்ளது. காலை 9.15 மணிக்கு பிறகு தாமதமாக அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அரைநாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும். பணிக்கு தாமதமாக வருவது தெரிய வந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைப்போல முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுபப்பட்டுள்ளது.