தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (33) . சம்பவத்தன்று இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி -தஞ்சை சாலையில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் திடீரென அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பார்த்திபனிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பார்த்திபன் கையை அரிவாளால் வெட்டிவிட்டு சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
