வாரிசு’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்தில் விஜய் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கடந்த மாதம் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொடைக்கானல் பகுதியில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து காஷ்மீர் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது. ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகுவதால் இந்த அதீத எதிர்பார்ப்புக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. இதுதவிர நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு நான்காவது முறையாக விஜய்யுடன் திரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.