மத்திய அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயரை மாற்றியது. இதை கண்டித்தும், அவைகளை நடைமுறைப்படுத்த கூடாது , அவற்றை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பிற்கு சென்னை வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.