Skip to content
Home » ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியபோது ஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருட்களுக்கு ரேட்டிங் ஸ்டார் கொடுத்தால் லாபம் என தகவல் வந்ததுள்ளது.
மேலும் அதற்கு கீழே டெலிகிராம் செயலிக்கு செல்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்தவுடன் அது ஒரு டெலிகிராம் குரூப்பிற்கு சென்றது.
அந்த குரூப்பில் இருந்த நபர்கள், தங்களுக்கு ஆன்லைன் டாஸ்க் என்ற பெயரில் பிரபல வணிக நிறுவனங்களின் மூலம் லாபம் கிடைப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த வாலிபர் டாஸ்க்கை செய்ய தொடங்க முதலில் ரூ.100 அனுப்பிய நிலையில், அவருக்கு ரூ.150 கிடைத்தது.
பின்னர், ரூ.32,000 அனுப்பிய நிலையில், அவருக்கான லாபம் ஆன்லைன் வாலட்(பணப்பை) பக்கத்தில் வரவு வைக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம், ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் என பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சத்து 4 ஆயிரத்து 721 ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது டெலிகிராம் குரூப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் நீங்கள் முழு டாஸ்க்கையும் முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்றதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறி குரூப்பில் இருந்து வெளியேறிவிட்டனர்.
அப்போதுதான் குரூப்பில் இருந்தவர்கள் போலியான நபர்கள் என்றும், தனக்கு மோசடி நடந்துள்ளது என ஐ.டி. நிறுவன ஊழியர் உணர்ந்தார். இது குறித்த அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!