தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அண்ணாமலை-தமிழிசை மோதலின் போது தமிழிசைக்கு எதிராக திருச்சி சூர்யா பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே பாஜ பெண் நிர்வாகி ஒருவரை போனில் தரக்குறைவாக பேசியதன் அடிப்படையில் ஏற்கனவே சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுபின்னர் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.